Search
Wednesday 17 January 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிணை முறி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதிலிருந்து ஜனாதிபதி பின்வாங்க மாட்டார் : என்கிறார் மகிந்த

பிணை முறி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதிலிருந்து ஜனாதிபதி பின்வாங்க மாட்டார் : என்கிறார் மகிந்த

பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய சகல குற்றவாளிகளுக்கும் தண்டனையை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையிலிருந்து எக்காரணத்திற்காகவும் ஜனாதிபதி பின்வாங்க மாட்டார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அங்குனுபெலஸ்ஸ பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் பிணை முறி மோசடி இடம்பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவல்ல இதற்கு முன்னர் 2008இல் இருந்து நடந்துள்ளது. இது தொடர்பாக எந்தவொரு விடயத்தையும் ஜனாதிபதி மறைக்காது தண்டனையை பெற்றுக்கொடுப்பார். இதுபற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டிய அவசியமில்லை. அப்படி விவாதம் நடத்தினால் அது சட்ட நடவடிக்கைகளுக்கு பாதிப்பாக அமையலாம். இந்நிலையைில் நீங்கள் அரசாங்கத்தில் இருப்பதனால்தான் இவ்வாறான மோசடிகள் தடுக்கப்படுகின்றன என்று எங்களைப்பற்றி மக்கள் கதைக்க தொடங்கியுள்ளனர். இதனால் நாங்கள் முறையாக நடந்துக்கொள்வோம்.
பிணைமுறையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் அனைத்துக்கும் தண்டனை வழங்குவதுடன் திருடிய பணத்தை மீள பெறுவதற்கும் நடவடிக்கையெடுக்கப்படும். இதற்காக ஜனாதிபதியும் , ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் மேற்கொள்ள வேண்டிய சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கும். ஒருபோதும் நாங்கள் பின் வாங்க மாட்டோம். என அவர் தெரிவித்துள்ளார்.த -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *