Search
Monday 18 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிணை முறி மோசடி விவகாரம் : அர்ஜுன உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை?

பிணை முறி மோசடி விவகாரம் : அர்ஜுன உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை?

மத்திய வங்கி பிணை முறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு சட்ட மா அதிபர் பிரதம நீதியரசரிடம் அனுமதி கோரியுள்ளார்.
2015 பெப்ரவரி 27ஆம் திகதி இடம்பெற்ற பிணை முறி கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பாக அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 23 குற்றங்களின் கீழ் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை தாக்கல் செய்வற்கு அனுமதி வழங்குமாறும் பிரதம நீதியரசரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *