செய்திகள்

பிரசார நடவடிக்கைகள் முடிந்தன – அமைதி காலம் அமுலில் : மீறினால் கடும் நடவடிக்கை

நாளை மறுதினம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது.
இதன்படி இன்று அதிகாலை முதல் அமைதி காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறி பிரசார செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கையெடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.ஏதேனும் அரசியல் கட்சியோ , சுயேட்சை குழுவோ , வேட்பாளரோ அல்லது ஆதரவாளரோ பிரசார கூட்டங்களை நடத்துதல் , வீடுகளுக்கு சென்று வாக்கு கேட்டல் , துண்டுபிரசுரங்களை விநியோகித்தல் , அலுவலகங்களில் பிரசார பதாதைகளை காட்சிப்படுத்தல் , சுவரொட்டிகள் மற்றும் அறிவித்தல்களை காட்சிப்படுத்தல் மற்றும் ஊடகங்களிளூடான விளம்பரங்களை வெளியிடுதல் ஆகியன முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
இதனை மீறி செயற்படுபவர்களை கைது செய்ய நடவடிக்கையெடுக்கப்படுமென பொலிஸார் அறிவித்துள்ளனர். -(3)