Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக ஐ.தே.க கடுமையான தீர்மானத்தை எடுத்தது!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக ஐ.தே.க கடுமையான தீர்மானத்தை எடுத்தது!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்கும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கு இன்று நடைபெற்ற அந்த கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை கட்சியில் தேவையான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரித கதியில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று கட்சி தலைமையகமான ஶ்ரீகொத்தாவில் மத்திய செயற்குழு கூடியது. இதன்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக ஆராய்ந்த கட்சியினர் அந்த பிரேரணையை தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர். இதன்போது கட்சியை சேர்ந்த யாரும் அந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க முடியாது என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழ் சிங்கள புத்ததாண்டுக்கு முன்னர் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *