Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிரதமரை கவிழ்ப்பது தொடர்பாக இரகசிய சந்திப்புக்களை நடத்திய அமைச்சர்கள்

பிரதமரை கவிழ்ப்பது தொடர்பாக இரகசிய சந்திப்புக்களை நடத்திய அமைச்சர்கள்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர்கள் குழுவொன்று இரகசிய கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் மகிந்த அமரவீரவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாகவே கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் மகிந்த அமரவீர , எஸ்.பி.திஸாநாயக்க , சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட குழுவினர் கலந்துக்கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *