Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிரதமர் இன்று வடக்கு விஜயம்

பிரதமர் இன்று வடக்கு விஜயம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கக இன்று புதன்கிழமை வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்படி இன்று வவுனியாவிற்கும் நாளை யாழ்ப்பாணத்திற்கும் செல்லவுள்ள பிரதமர் அங்கு பல வேலைத் திட்டங்களை ஆரம்பித்து வைக்கக்கவுள்ளார்.
வவுனியாவில் பொது வைத்தியசாலையில் இரண்டாவது சுகாதாரத்துறை மேம்படுத்தல் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை மக்கள் பயன்பாட்டுக்குக் கையளிக்கவுள்ளார். அத்துடன் நெதர்லாந்து அரசால் வழங்கப்படவுள்ள, இலகுக் கடன் உதவியில் அமைக்கப்படவுள்ள இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவுக்கான அடிக்கல்லையும் நடவுள்ளார்.
இதேவேளை நாளை யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் அவர் அங்கும் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளார். வீட்டுத் திட்டங்களைக் கையளிக்கும் அவர் மயிலிட்டியில் அமைக்கப்பட்ட துறைமுகத்தை மக்களுடைய பாவனைக்குக் கையளிப்பார்.
இவருடன் அமைச்சர்கள் பலரும் அங்கு செல்லவுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *