Search
Wednesday 24 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிரதமர் ரணில் நாளை யாழ் விஜயம்

பிரதமர் ரணில் நாளை யாழ் விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள அவர், ஐக்கிய தேசியக் கட்சியினரை நட்சத்திர விடுதி ஒன்றில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.அத்துடன் நாளை மறுதினம் சுன்னாகம் – கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளளார்.இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் அழைப்பின் பேரிலேயே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.இதன்போது ஐந்தரை கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் கலையரங்கத்துக்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டி வைக்கவுள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *