Search
Monday 19 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிரதமர் வேட்பாளராக சம்பிக்க?

பிரதமர் வேட்பாளராக சம்பிக்க?

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை களமிறக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழுவொன்று கட்சி தலைமையுடன் பேச்சுகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்க்கட்சி தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்க தீர்மானித்துள்ள போதும் கட்சி தலைவர் பதவியை அவருக்கு வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தான் கட்சி தலைவர் பதவியின்றி பிரதமராக போட்டியிட மாட்டேன் என தெரிவித்துள்ளதாகவும் இதன் காரணத்தினால் சம்பிக்க ரணவக்கவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க திட்டமிடப்பட்டு வருவதாககவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *