Search
Monday 21 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிரதம நீதியரசர் பதவிவிலக தீர்மானம்

பிரதம நீதியரசர் பதவிவிலக தீர்மானம்

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவிவிலகுவதற்கு தீர்மானித்துள்ள அதேவேளை கடந்த அரசாங்கத்தினால் பதவிநீக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர்சிரானி பண்டாரநாயக்க அப்பதவியில் மீள அமர்த்தப்படவுள்ளார்.
பிரதமமந்திரி ரணில்விக்கிரமசிங்கவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் மொஹான் பீரிஸ் பதவிவிலக தீர்மானித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிரதம நீதியரசர் பதவிவிலக வேண்டுமென கோரிக்கைவிடுத்து பல சட்டத்தரணிகள் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் முன்னிலையில் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்த சட்டத்தரணிகள் சங்கம்,சிரானிபண்டாரநாயக்காவை மீண்டும் உயர்நீதியரசர் பதவியலமர்த்த வேண்டும் எனவும் கேட்டிருந்தது.
தேர்தலில் தோல்வியடைந்த போதிலும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக 8 ம்திகதி நள்ளிரவு முதல் அலரிமாளிகையில் இடம்பெற்ற இரகசிய பேச்சவார்த்தைகளின் போது பிரதமநீதியரசரும் பிரசன்னமாகியிருந்தார் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்திருந்தது.
பிரதமநீதியரசர் அரசியல்நடவடிக்கைகள் எதிலும் கலந்துகொள்ளாமலிருப்பது முக்கியமானது என்றும் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியிருந்தது.அலரிமாளிகையில் அவ்வாறான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற வேளை மொஹான் பீரிஸ்  பிரசன்னமாகியிருந்தது தவறானது என்றும் அது சுட்டிக்காட்டியிருந்தது.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *