Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிரிட்டனில் செயற்படும் இஸ்லாமிய தீவிரவாதிகளிற்கு சவுதிஅரேபியாவே உதவி-குற்றம்சாட்டுகின்றது புதிய அறிக்கை

பிரிட்டனில் செயற்படும் இஸ்லாமிய தீவிரவாதிகளிற்கு சவுதிஅரேபியாவே உதவி-குற்றம்சாட்டுகின்றது புதிய அறிக்கை

பிரிட்டனில் செயற்படும் இஸ்லாமிய தீவிரவாதிகளிற்கான வெளிநாட்டு நிதியை சவுதிஅரேபியாவே வழங்கி வருவதாக தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ள ஹென்றி ஜக்சன் சமூகம் என்ற அமைப்பு வளைகுடாவிலிருந்து தீவிரவாதிகளிற்கு கிடைக்கும் நிதி குறித்த முழுமையான விசாரணையை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இங்கிலாந்தின் மசூதிகள் உட்பட மத அமைப்புகள் தங்களிற்கு கிடைக்கின்ற நிதி குறித்த விபரங்களை வழங்கவேண்டுமென அவற்றிடம் அரசாங்கம் கோரிக்கை விடுக்கவேண்டும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது..
1960 முதல் வஹாபி இஸ்லாத்தை பரப்புவதற்காக சவுதிஅரேபியா மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது மேற்குலக நாடுகளை சேர்ந்த அமைப்புகளிற்கும் அந்த நாடு நிதி வழங்கியுள்ளது எனவும் ஹென்றி ஜக்சன் சமூகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனை பொறுத்தவரையில் இந்த நிதியை சவுதி அரேபியா மசூதிகளிற்கும் இஸ்லாமிய கல்விநிறுவனங்களிற்கும் வழங்கியுள்ளது எனவும் அறிக்கையில் தெரிவி;க்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நிதியை பயன்படுத்தி மசூதிகளும் கல்விநிறுவனங்களும் தீவிரவாதத்தை போதிப்பவர்களை ஊக்குவித்துள்ளன அது குறித்த நூல்களை ஊக்குவித்துள்ளன என்றும் ஹென்றி ஜக்சன் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *