Search
Saturday 16 December 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிரிட்டனை சேர்ந்த ஐஎஸ் உறுப்பினர்களை தேடிக்கண்டு பிடித்து கொல்லவேண்டும்- பாதுகாப்பு அமைச்சர் கருத்து

பிரிட்டனை சேர்ந்த ஐஎஸ் உறுப்பினர்களை தேடிக்கண்டு பிடித்து கொல்லவேண்டும்- பாதுகாப்பு அமைச்சர் கருத்து

பிரிட்டனை சேர்ந்த ஐஎஸ் உறுப்பினர்களை தேடிக்கண்டு பிடித்து கொல்லவேண்டும்- பாதுகாப்பு அமைச்சர் கருத்துசேர்ந்த ஐஎஸ் உறுப்பினர்களை தேடித்தேடி கொலைசெய்யவேண்டும் அவர்கள் நாடு திரும்புவதை அனுமதிக்க கூடாது என பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் கவின் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
சிரியாவிலும் ஈராக்கிலுமிருந்து பின்வாங்கிக்கொண்டிருக்கும் ஐஎஸ் உறுப்பினர்களில் பிரிட்டனை சேர்ந்தவர்கள் இலக்குவைக்கப்படுகின்றனர் எனவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்
இறந்த பயங்கரவாதியால் பிரிட்டனிற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்த பயங்கரவாதியையும் அவர் எந்த நாட்டை சேர்ந்தவராகயிருந்தாலும் பிரிட்டனிற்குள் அனுமதிக்க கூடாது அவர்களால்ஏற்படககூடிய ஆபத்தை தடுப்பதற்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
லிபியா சிரியா ஈராக்கில் உள்ள ஜிகாத் குழுக்களே பிரிட்டனில் பயங்கரவாத தாக்குதல்களை ஊக்குவிக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இவர்களை ஒழிப்பது இந்த வருடமோ அல்லது அடுத்த வருடமோ முடியப்போவதில்லை அது தொடரப்போகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *