Search
Tuesday 4 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிரிட்டிஸ் பிரதமரை படுகொலை செய்வதற்கு ஐஎஸ் அமைப்பினர் மேற்கொண்ட சதி முறியடிப்பு

பிரிட்டிஸ் பிரதமரை படுகொலை செய்வதற்கு ஐஎஸ் அமைப்பினர் மேற்கொண்ட சதி முறியடிப்பு

பிரிட்டிஸ் பிரதமர் தெரேசா மேயை படுகொலை செய்வதற்கு ஐஎஸ் அமைப்பு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக ஸ்கை நியுஸ் தெரிவித்துள்ளது.
பிரதமரின் இல்லத்திற்கு அருகில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தவும் அதன் போது ஏற்படும் குழப்பத்தை பயன்படுத்தி அவரை படுகொலை செய்யவும் திட்டமிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
குறிப்பிட்ட சதியின் பாரதூர தன்மை காரணமாக பிரிட்டனின் புலனாய்வு அமைப்பான எம்15இன் இயக்குநர் அது குறித்து அமைச்சரைவைக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த வாரம் ஆயுதமேந்திய பொலிஸாரால் இருவர் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்தே இந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சந்தேக நபர்களிற்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது எனவும் விரைவில் இது குறித்த தகவல்களை அதிகாரிகள் வெளியிடுவார்கள் எனவும்ஸ்கை நியுஸ் தெரிவித்துள்ளது.
லண்டனின் வடக்கை சேர்ந்த 20 வயதான நமீமூர் ரஹ்மான் மற்றும் பேர்மிங்காமின் வடகிழக்கு பகுதியை சேர்ந்த 21 வயது முகமட் இம்ரான் என்ற இருவரையே காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *