Search
Tuesday 25 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பியர்கள் எவ்வாறு பிரித்தானிய குடியுரிமையை பெறுவது? குடிவரவு அமைச்சரின் மகிழ்ச்சியான செய்தி

பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பியர்கள் எவ்வாறு பிரித்தானிய குடியுரிமையை பெறுவது? குடிவரவு அமைச்சரின் மகிழ்ச்சியான செய்தி

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்துசெல்ல பிரித்தானிய மக்கள் வாக்களித்ததனை தொடர்ந்து பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில் பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பியர்களின் நிரந்தர வதிவுரிமை தொடர்பாக தெளிவற்ற ஒரு நிலைமை இருந்து வந்தது. இந்த நிலையில் பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினரும் குடிவரவு அமைச்சருமான Hon.Caroline Nokes இது தொடர்பான அறிவிப்பொன்றினை கடந்த 21.06.2018 அன்று விடுத்துள்ளார்.

அதன்படி பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய பிரஜைகள் தங்கள் பிரித்தானிய குடியுரிமையினை (Settlement) உறுத்திப்படுத்த பின்வரும் மூன்று தேவைப்பாடுகளை பூர்த்திசெய்த்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி,
1. பிரித்தானிய பிரஜைகள் தங்கள் ஆள் அடையாளத்தினை நிரூபிக்கவேண்டும்
2. பிரித்தானியாவில் வசித்த காலப்பகுதியினை உறுதிப்படுத்தல் வேண்டும்
3. குற்றவியல் தண்டனைகள் இல்லாது இருக்க வேண்டும்.

பிரித்தானிய குடிஉரிமைக்கு விண்ணப்பிக்கும் ஐரோப்பிய வயது வந்தோர் தற்போது நடைமுறையிலுள்ள விண்ணப்ப கட்டணமான £65 செலுத்தி விண்ணப்பிக்க முடியும் என்பதுடன் 16 வயத்துக்குட்பட்டவர்கள் £32.50 செலுத்தி தங்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும் என்று அறிவித்துள்ளார். மேலும் ஐரோப்பியர் என்ற அடிப்படையில் நிரந்தர வதிவுரிமை (Permanent Residence) மற்றும் வரையறையற்ற வதிவுரிமை (Indefinite Leave to Remain) அட்டைகளை வைத்திருப்போர் இலவசமாக தங்கள் வதிவுரிமை ஆவணத்தினை பிரித்தானிய குடியுரிமை ஆவணமாக மாற்றிக்கொள்ளமுடியும் என்றும் அறிவித்துள்ளார்.

5 வருடங்களுக்கு குறைவாக பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பியர்கள் பிரித்தானிய குடியுரிமைக்கான முதற்கட்ட ஆவணத்தினை (Pre-Settled) கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் அவர்களின் குடியுரிமைக்கான விண்ணப்பம் கட்டணமின்றி பரிசீலிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் இவ்விடயம் தொடர்பான குடிவரவு சட்ட வரைபு வேலை வழங்குநர்கள், உள்ளூர் அதிகாரசபைகள் மற்றும் சமூக நிறுவனங்கள் போன்ற பங்குதாரர்களின் கருத்தறிய விடப்பட்டுள்ளதுடன் இவர்களின் கருத்தறியலுடன் குடிவரவு சட்ட வரைபு பாராளுமன்றத்துக்கு அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இங்கு முக்கியமாக கருத்தில் கொள்ளவேண்டிய விடயம் யாதெனில் விண்ணப்பங்கள் 30/03/2019 முதல் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன் 30/06/2021 விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாகும். எனவே, பிரித்தானியாவில் வசிக்கும் அனைத்து ஐரோப்பியர்களும் குறிப்பிட்ட திகதிக்குள் தங்கள் பிரித்தானிய குடியுரிமைக்கான விண்ணப்பத்தினை முன்மொழியப்பட்டுள்ள குடிவரவு சட்டத்தின் பரிசீலிப்பதற்காக சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விசேட தேவைப்பாடுடைய ஐரோப்பிய பிரஜைகளின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும்போது உள்நாடு அலுவல்கள் திணைக்களம் (Home Office) ஏதுவான படிமுறைகளை பின்பற்றும் என்பதுடன் அவர்களின் விண்ணப்பங்கள் தொடர்பாக விசேட கவனம் மற்றும் உதவிகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு: David Benson Solicitors, 28 Merton High Street, London, SW19 1DN, Tel: 020 8540 8888, Fax: 0870 120 8384


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *