Search
Monday 25 September 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிரித்தானியாவில் வாழ்க்கை துணையுடன் இணைவதற்கு இலங்கையிலிருந்து விண்ணப்பிப்பவர்கள்கள் காத்திருக்கவேண்டிய நிலை

பிரித்தானியாவில் வாழ்க்கை துணையுடன் இணைவதற்கு இலங்கையிலிருந்து விண்ணப்பிப்பவர்கள்கள் காத்திருக்கவேண்டிய நிலை

இலங்கையில் இருந்து தமது வாழ்க்கை துணையுடன் நிரந்தரமாக (Settlement) வசிப்பதற்கு நுழைவு அனுமதிக்கு (Visa) விண்ணப்பித்தோருக்கான முடிவுகள் காலதாமதாகின்றன.

தமது வாழ்க்கை துணையுடன் நிரந்தரமாக வசிப்பதற்காக பிரித்தானிய நுழைவு அனுமதிக்கு (விசா) விண்ணப்பித்தவர்கள் கடந்த 3 மாதங்களுக்கு மேல் காத்திருக்கும் துர்பாக்கிய நிலை இலங்கையில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கு 2017 இன் ஆரம்பத்தில் இருந்து ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு புதிய நுழைவு அனுமதி பரிசீலனை முறையினை பிரித்தானிய உயர்ஸ்த்தானிகராலயம் கடந்த ஆண்டு இறுதி முதல் நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன்படி, பிரித்தானியாவில் தமது வாழ்க்கை துணையுடன் நிரந்தரமாக (settlement) வசிப்பதற்காக நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிப்பவர்கள் தமது விண்ணப்பத்துடன் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பிரித்தானியாவின் Sheffield இல் உள்ள உள்நாட்டு அலுவலகத்திற்கு (Home Office) சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் திகதியில் தமது கடவுச்சீட்டினை மட்டும் சமர்ப்பித்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையின்படி விண்ணப்பித்தவர்கள் கடந்த 3 மாதங்களாக முடிவுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் மிகவும் துர்பாக்கியமான விடயம் என்னவெனில் இலங்கை ரூபாய் 90,000 மேலதிகமாக செலுத்தி 10 நாட்களுக்குள் முடிவினை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தவர்களும் இலவு காத்த கிளி போல காத்திருக்கிறார்கள் எந்த முடிவும் இன்றி.

இதே வகையான நுழைவு அனுமதி விண்ணப்ப முறை Pakistan மற்றும் Nigeria போன்ற நாடுகளில் இருந்து விண்ணப்பிப்பவர்களுக்கு ஏற்கனேவே நடைமுறையில் இருந்த போதிலும் கடந்த ஆண்டு இறுதி முதலே இலங்கை விண்ணப்பதாரர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

புதிய நடைமுறையே இந்த காலதாமதத்துக்கு காரணம் என விண்ணப்பதாரிகள் கவலை வெளியிட்டுள்ளதுடன் பிரித்தானியாவின் புதிய கொள்கைகள் எந்தளவு தூரம் அந்த நாட்டின் சமூக வளர்ச்சிக்கு பங்களிக்க போகின்றது என்பது கேள்விக்குறியாகவே உள்ளதென பலர் ஆதங்கப்படுகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *