Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பீ.சீ.ஆர் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கைதியொருவர் 8ஆம் மாடியிலிருந்து விழுந்து பலி

பீ.சீ.ஆர் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கைதியொருவர் 8ஆம் மாடியிலிருந்து விழுந்து பலி

கொரோனா உள்ளதா என அறிய பீ.சீ.ஆர் பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதியொருவர் 8ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் சந்தேகத்திற்கிடமான நோய் அறிகுறிகளுடன் இருந்த இந்த கைதி கடந்த 12ஆம் திகதி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு 12 மணியளவில் கைதி காணாமல் போயுள்ள நிலையில் பின்னர் அவர் மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தப்பிச் செல்ல முயற்சித்த போது இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
34 வயதுடைய போதைப் பொருள் குற்றச் செயலுடன் தொடர்புடைய கைதியொருவரே இவ்வாறாக உயிரிழந்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *