Search
Saturday 24 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

புதிய அரசாங்கத்தின் பக்கம் ஒருபோதும் செல்லமாடோம் – மனோகணேசன்

புதிய அரசாங்கத்தின் பக்கம் ஒருபோதும் செல்லமாடோம் – மனோகணேசன்

சிங்கள மக்களை ஏமாற்றி பொய் வாக்குறுதிகளை வழங்கியே இந்த அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தது. ஆனால் இவர்களின் சுயரூபம் வெளிவந்துள்ளது.பொய் வாக்குறுதிகளை தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது ஒன்றும் செய்ய முடியாமல் நிலை தடுமாறிக்கொண்டிருக்கின்றது.நாங்கள் ஒருபோது அரசாங்கத்தின் பக்கம் செல்லமாடோம். ஆனால் பொதுத் தேர்தலில் நாங்கள் வெற்றிபெற வேண்டும். அதற்காக அமைக்கும் கூட்டணியில் ஐக்கிய தேசியக் கட்சியே பிரதான கட்சியாக இருக்கப்போகின்றது.

இதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் தலைமைத்துவப் பிரச்சினையை அவர்கள் விரைவாக தீர்த்துக்கொள்ள வேண்டும்.புதிய அரசாங்கத்தின் பக்கம் ஒருபோதும் செல்லமாடோம் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி, தலைமைத்துவப் பிரச்சினையை விரைவில் தீர்த்துக்கொண்டு புதிய கூட்டணியாக தேர்தலுக்கு முகம்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *