Search
Monday 23 October 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

புதிய அரசியலமைப்பு நாட்டை இரண்­டா­கக் கூறு­போ­டு­வ­தற்கு வழிவகுக்கும்

புதிய அரசியலமைப்பு நாட்டை இரண்­டா­கக் கூறு­போ­டு­வ­தற்கு வழிவகுக்கும்

புதிய அர­ச­மைப்­பா­னது ஒற்­றை­யாட்­சிக்கு அச்­சு­றுத்­த­லாக அமை­வ­து­டன், நாட்டை இரண்­டா­கக் கூறு­போ­டு­வ­ தற்கு அது வழி­வ­குக் கக்­கூ­டும் என்று ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் நேற்று நேரில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது விமல் வீர­வன்ச தலை­மை­யி­லான தேசிய சுதந்­திர முன்­னணி.

புதி­ய­தொரு அர­ச­மைப்பு உரு­வா­வ­தற்கு எதி­ராக போர்க்­கொடி தூக்­கி­ யுள்ள அர­சி­யல் கட்­சி­க­ளை­யும், அமைப்­பு­க­ளை­யும் தனித்­த­னியே சந்­தித்­துப் பேசி அவற்றை வழிக்­குக் கொண்டு வரு­வ­தற்கு ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தானே கள­மி­றங்­கி­யுள்­ளார்.

அதன் முதல் சந்­திப்பு தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யு­டன் நேற்று நடந்­தது.

‘‘புதிய அர­ச­மைப்­பில் ஒருங்கியை பட்­டி­யல் (ஒரே விட­யத்­தில் மத்­திக்­கும் மாகா­ணங்­க­ளுக்­கும் அதி­கா­ரங்­கள் வழங்­கப்­ப­டும் பகுதி) நீக்­கப்­பட்டு மாகா­ணங்­க­ளுக்கு அதி­கா­ரங்­க­ளைப் பகி­ரும் முயற்சி இடம்­பெ­ற­வுள்­ளது. அதற்­கேற்ற வகை­யில்­தான் இடைக்­கால அறிக்கை அமைந்­துள்­ளது. ஒற்­றை­யாட்­சிக்­கும், பௌத்த மதத்­துக்­குள்ள முன்­னு­ரி­மை­யை­யும் இடைக்­கால அறிக்கை சவா­லுக்­குட்­ப­டுத்­தி­யுள்­ளது. இதை ஏற்­க­மு­டி­யாது. புதி­ய­தொரு அர­ச­மைப்பு அவ­சி­ய­மில்லை’’ என்று அரச தலை­வ­ரி­டம் தாம் எடுத்­து­ரைத்­த­னர் என்று விமல் வீர­வன்ஸ செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *