Search
Tuesday 15 January 2019
  • :
  • :

புதிய அரசியலமைப்பு யோசனையை எதிர்க்க திட்டமிடும் ஐ.தே.கவுக்குள் சிலர்

புதிய அரசியலமைப்பு யோசனையை எதிர்க்க திட்டமிடும் ஐ.தே.கவுக்குள் சிலர்

புதிய அரசியலமைப்பு யோசனையை எதிர்ப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த பின்வரிசை எம்.பிக்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியலமைப்பு யோசனையில் சில விடயங்களுக்கு தங்களால் இணங்க முடியாது எனவும் இதன்படி அது பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டால் அதனை தோற்கடிப்பதற்கு அவர்கள் நடவடிக்கையெடுப்பார்கள் என தமக்கு தெரிய வந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு சபை கூடிய போது ஐ.தே.கவில் பெருந்திரளான எம்.பிக்கள் அதில் கலந்துக்கொண்டிருக்காத நிலையில் அவர்களின் நிலைப்பாடு தொடர்பாக தமக்கு சந்தேகம் இருப்பதாக மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *