Search
Monday 16 September 2019
  • :
  • :

புதிய இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்படலாம் என தகவல்கள்

புதிய இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்படலாம் என  தகவல்கள்

இலங்கையின் தற்போதைய இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க நாளையுடன் ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே புதிய இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போதைய இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்கவிற்கு பதவி நீடிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளபோதிலும் அதற்கான சாத்தியம் இல்லை என பாதுகாப்பு மற்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதேவேளை சவேந்திர டி சில்வா மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தினர் கடும் எதிர்ப்பை வெளியிடும் நிலை காணப்படுகின்றது.

இதேவேளை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனசவேந்திர டி சில்வா இலங்கையின் இராணுவதளபதியாக நியமித்தால் ஐக்கியநாடுகள் அமைதிப்படையுடனான இலங்கையின் தொடர்புகள் முற்றாக தடைபடலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள இராணுவ அதிகாரியும் முப்படைகளின் பிரதானியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா இலங்கையின் இராணுவதளபதியாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *