Search
Saturday 22 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

புதிய கோணத்தில் பரவும் கொரோனா – அச்சத்தில் பிரிட்டன் மக்கள்

புதிய கோணத்தில் பரவும் கொரோனா – அச்சத்தில் பிரிட்டன் மக்கள்

சீனாவில் இருந்து பிரிட்டன் வந்த ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர், பிரிட்டனில் உள்ள இரு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அந்த மருத்துவர்கள் உறுதி செய்த போது, அந்த இரு மருத்துவர்களையும் கொரோனா வைரஸ் தாக்கியது.இவர்கள் மூவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த நபரை சந்தித்த பின், 15 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருப்பது தெரியவந்துள்ளது. நோய்த் தொற்று இருப்பவர்களை கொரோனா எளிதாகத் தாக்கும் என்பதால், அந்த ’15 நோயாளிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம்’ என, பிரிட்டன் சுகாதாரத்துறையினர் கருதுகின்றனர்.gallerye_165343110_2478074

அந்த, 15 பேரால் மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் பரவும் அச்சம் எழுந்துள்ளது. இதனால், 15 பேரைக் கண்டறியும் தீவிர முயற்சியில், பிரிட்டன் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் பணியாற்றிய மருத்துவமனைக்கு சீல் வைத்து, கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *