Search
Friday 15 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளைய தினம் மாநாயக்க தேரர்கள் முன்னிலையில் கண்டியில் வெளியிடப்படவுள்ளதாகவும் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் தமது தேர்தல் விஞ்ஞாபனம் அமையும் எனவும் அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். முதல் பிரதி மாநாயக்க தேர்கள் முன்னிலையில் வழங்கப்படும். அதேபோல் கண்டியில் பாரிய அளவில் எமது மக்கள் கூட்ட நிகழ்வில் எமது முழு தேர்தல் விஞ்ஞாபனம் படிவமும் வெளிப்படுத்தப்படும்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சகல மக்களும் ஏற்றுகொள்ளும் ஜனநாயக ரீதியிலான திட்டங்களே முழுமையாக உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த நாட்டில் நடுத்தர வர்க்க மக்களின் பாதுகாப்பு பொருளாதார தன்மைகளில் நாம் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். அனைவரும் வாழக்கூடிய சூழலை உருவாக்கிக்கொடுப்பது மட்டுமல்லாது தேசிய பாதுகாப்பு, கல்வி சுகாதாரம் என அனைத்து பிரதான துறைகளிலும் நாம் கவனம் செலுத்துகின்றோம்.

ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச அதி கார பகிர்வே எமது நோக்கம். இதில் கோரிக் கைகளை ஏற்க அவசியமில்லை. தமிழ் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளுக்கும் அப்பால் தமிழ் மக்களின் ஆதரவு தமக்கே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளைய தினம் வெளியிடப்படவுள்ள நிலையில் தமது தேர்தல் விஞ்ஞாபனம் குறித்தும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்தும் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *