Search
Wednesday 19 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக முக்கிய தீர்மானத்திற்கு தயாராகும் கல்வி அமைச்சர்

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக முக்கிய தீர்மானத்திற்கு தயாராகும் கல்வி அமைச்சர்

5ஆம் தர புலமைப் பரிசில் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதன்போது எவ்வித பேதங்களும் இன்றி நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக சிந்தித்து சகலரும் ஒன்றிணைந்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது புலமைப் பரிசில் தொகை 500 ரூபாவிலிருந்து 750 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் இதனை மேலும் அதிகரிப்பது தொடர்பாக அவதானம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக ஜே.வி.பியினரால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *