Search
Friday 15 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை புதிய அரசு நீங்கப்போவதில்லை: அமைச்சர் அஜித் பி.பெரேரா

புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை புதிய அரசு நீங்கப்போவதில்லை: அமைச்சர் அஜித் பி.பெரேரா

வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்களிற்கு மஹிந்தராஜபக்ஷ அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நீடிக்கப்படும் என புதிய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி.பெரேரா மேலும் தெரிவிக்கையில் –
விடுதலைப்புலிகளை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டு கடந்த அரசாங்கத்தினால் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களிற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடையை தொடர்ந்தும் நீடிப்பதில் புதிய அரசாங்கத்தின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் மீண்டும் தலைதூக்காது இருக்கும் வகையில் இந்தத் திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த புதிய அரசு தீர்மானித்துள்ளது என்றார். மகிந்த ஆட்சியின் போது நாடு கடந்த தமிழீழ அரசு உலகத் தமிழர் பேரவை பிருத்தானியா தமிழர் பேரவை உட்பட 15 அமைப்புக்களிற்கும் பெருமளவு தனி நபர்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *