Search
Thursday 14 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

புளொட் சஜித் பிரமதாசவை ஆதரிக்க தீர்மானம்

புளொட்  சஜித் பிரமதாசவை ஆதரிக்க  தீர்மானம்

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்துள்ள நிலையில் ஏனைய இரண்டு பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் கட்சிகளின் நிலைப்பாடுகள் இன்னமும் அறிவிக்கப்படாது உள்ள நிலையில் அவர்களின் நிலைப்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த தர்மலிங்கம் சித்தார்த்தன் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவை ஆதரிக்க தமிழீழ மக்கள் விடுதலை கழகம்( புளொட்) தீர்மானம் எடுத்துள்ளதுடன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ ) தீர்மானம் நாளை அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.அத்துடன் தமிழரசு கட்சி தனித்து தீர்மானத்தை அறிவிக்காது கூட்டமைப்பாக இணைந்து தீர்மானத்தை அறிவித்திருந்தால் ஆரோக்கியமாக இருந்திருக்கும் என அவர்மேலும் தெரிவித்தார்.

எமது நோக்கம் என்னவெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பாக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளருடன் நிற்க வேண்டும் என்பதே. அதில் எமது தலைமைகள் தனித்தனி தீர்மானம் எடுக்க வேண்டியதில்லை. கூட்டமைப்பாக ஒரு தீர்மானத்தை வெளிப்படுத்தியிருந்தால் இன்னமும் ஆரோக்கியமானதாக இருந்திருக்கும். எவ்வாறு இருப்பினும் இப்போதும் நாம் ஒற்றுமையாக தமிழ் மக்களின் நலன்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடு.

இது குறித்தி தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ )தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில் நாம் கட்சியாக இன்னமும் தீர்மானம் ஒன்றினை எடுக்கவில்லை. நாளைய தினம் எமது கட்சியின் உறுப்பினர்கள் கூடி எமது நிலைப்பாடுகள் குறித்து ஆராயவுள்ளோம். இலங்கை தமிழரசு கட்சியின் தீர்மானம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அதேபோல் வெறுமனே ஒரு வேட்பாளரை வீழ்த்த இன்னொரு வேட்பாளருக்கு அர்த்தமற்ற ஆதரவை வழங்கவும் முடியாது. நாம் ஒரு ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றால் எமது மக்கள் சார் விடயங்களில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாது ஒரு வேட்பாளரை வெற்றிபெற செய்ய எமது மக்களை ஏமாற்ற முடியாது. சில தீர்மானங்களில் நாம் உறுதியாக உள்ளோம். எமது நிலைப்பாடுகள் குறித்து நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் பேசுவோம். எம்முடன் பேசவும் அவர் தயாராக உள்ளார். நாளைய தினம் நாம் எமது தீர்மானத்தை அறிவிப்போம் என்றார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்துள்ள நிலையில் ஏனைய இரண்டு பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் கட்சிகளின் நிலைப்பாடுகள் இன்னமும் அறிவிக்கப்படாது உள்ள நிலையில் அவர்களின் நிலைப்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த போதே அவர்கள் இதனை தெரிவித்தார்கள்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *