Search
Monday 18 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பூஜிதவின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்

பூஜிதவின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.தன்னை கட்டாய விடுமுறையில் அனுப்பியது சட்டவிரோதமானது என கூறி பூஜித் ஜயசுந்தர கடந்த மாதம் 29ஆம் திகதி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.இந்தநிலையிலேயே குறித்த மனு தொடர்பாக தன்னிலை விளக்கமளிக்கும் வகையில், அவர் இன்றுதிங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டாய விடுமுறை குறித்து பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.இதற்கமைய குறித்த மனு எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *