Search
Saturday 20 October 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது பாடலின் இசையமைப்பாளர் யாழ்.ரமணன் காலமானார்

பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது பாடலின் இசையமைப்பாளர் யாழ்.ரமணன் காலமானார்

ஈழ விடுதலைக்கு உரமூட்டிய பாடல்கள் பலவற்றினை இசையமைத்த ஈழத்தின் பிரபல இசைக்கலைஞரான ரமணன் இன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.பிஞ்சு மனம் படத்தில் வரும் பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது பாடலிற்கு அவர் இசை அமைக்க குமாரசாமி பாடியிருந்தார்.அத்துடன் ஈழக் குடும்பங்களின் சிதைவை சித்திரிக்கும் அற்புதமான பாடலாக அது அமைந்திருந்தது. ஈழ விடுதலைப்போராட்டத்தில் 600 இற்கும் அதிகமான பாடல்களிற்கு இசைத்தமைவர் என்ற பெருமையினை பெற்ற ரமணனின் இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

ஈழத்தில் ஆயிரக்கணக்கான இசை அரங்குகள் ஊடாக இரசிகர்களை கவர்ந்த இவர் ஈழத்தின் மூத்த இசைத்துறைக் கலைஞர்கள் மற்றும் ஒளி, ஒலிபரப்புத் துறை கலைஞர்களுடன் இணைந்து இசைப் பணியாற்றியவர். காலத்திற்கு காலம் பல்வேறு இசைக்குழுக்களிலும் இவர் முக்கியத்துவமான கலைஞராக இயங்கியுள்ளார்.

இதேவேளை கலை பண்பாண்டுக் கழகம் வெளியிட்ட ஈழத்தின் பெண்கள் விடுதலையுடன் தொடர்பான திசைகள் வெளிக்கும் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்த இவர் தமிழீழ பெண் போராளிகளுடன் இணைந்து இசை படைப்புக்களை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் தேவாவுடனும் இணைந்து இவர் பணியாற்றியுள்ளார்.

ஈழத்தின் ஆரம்பாகால இசை முயற்சிகளுக்கு பெரும் பங்காற்றியுள்ள யாழ் ரமணன் பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சியில் தங்கள் கிற்றார் இசை ஒலித்து பிரபலம் பெற்றிருந்தார்.இவருக்கு யாழ் ரமணன் என்ற பெயரை பிரபல அறிவிப்பாளர் அபி.எச்.அப்துல் ஹமீத் சூட்டினார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *