Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பெண்கள் விடுதிக்குள் இரகசியமாகப் புகுந்த இராணுவச் சிப்பாய் வசமாக மாட்டினார்

பெண்கள் விடுதிக்குள் இரகசியமாகப் புகுந்த இராணுவச் சிப்பாய் வசமாக மாட்டினார்

அநுரராதபுர வளாகத்தின் விவசாயப் பிரிவுக்கான பெண்கள் விடுதிக்குள் இரகசியமாகச் செல்வதற்கு முற்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவர் கையும் களவுமாக அகப்பட்டுக்கொண்ட சம்பவம் ஒன்று இரண்டு நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் இடம்பெற்றிருக்கின்றது.

கைதானவர் அநுராதபுரம் பகுதியில் வசிக்கும் 28 வயதான இராணுவச் சிப்பாய் என அடையாளங்காணப்பட்டுள்ளது. பெண்கள் விடுதிக்குள் இரகசியமாகப் புகுவதற்கு முற்பட்டபோது இவர், விடுதிக் காவலாளியால் கையும் மெய்யுமாகக் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விடிபட்ட இவர் உடனடியாக அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பொலிஸார் இவரை சாலியபுர இராணுவ முகாமில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக ஒப்படைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
R-06


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *