Search
Tuesday 7 April 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பெண் என்பதினால் அவரின் நடத்தையையே குறை சொல்வதையே பெரிய காரணமாக கொள்கின்றனர் – மனித உரிமை செயற்பாட்டாளர் நளினி

பெண் என்பதினால் அவரின் நடத்தையையே குறை சொல்வதையே பெரிய காரணமாக கொள்கின்றனர் – மனித உரிமை செயற்பாட்டாளர் நளினி

இலங்கை முழுவதும் சென்று பெண்கள் அரசியலில் ஈடுபடவேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பான பயிற்சிகளை வழங்கிவரும் நிலையில், நானும் அரசியலில் ஈடுபடுவதன் மூலமே ஏனைய பெண்களையும் ஈடுபடுத்தமுடியும் என்ற அடிப்படையிலேயே தேர்தலில் போட்டியிட முன்வந்தேன்.ஆனால் என்மீது முகம் தெரியாத, அடையாளம் தெரியாத வலைத்தளங்களில் இருந்து ஒரு பெண் என்ற காரணத்தினால் நடத்தை தொடர்பான அவதூருகளும் அரசியல் ரீதியான அவதூறுகளும் எந்த ஆதாரமும் இல்லாமல் பரப்பப்படுகின்றன என மனித உரிமை செயற்பாட்டாளரும் பெண் உரிமை செயற்பாட்டாளருமான திருமதி நளினி ரட்னராஜா தெரிவித்துள்ளார்.

பெண் என்ற காரணத்தினால் அவரின் நடத்தையையே குறை சொல்வதையே பெரிய காரணமாக கொள்கின்றனர். இவ்வாறான நிலையிலேயே பல பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு அச்சம்கொள்கின்றனர்.இவ்வாறான நிலையில், எனக்கு ஊக்கமளிப்பதற்கு பதிலாக என்மீது சேறு பூசும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டுள்ளன. அனைத்து கட்சிகளும் பல ஆண்கள் போட்டியிடும்போது அவர்கள் பற்றியோ, அவர்களின் நடத்தை பற்றியோ, அவர்களின் குடும்ப நிலை பற்றியோ இங்கு பேசுவதில்லை

ஆனால் என்மீது முகம் தெரியாத, அடையாளம் தெரியாத வலைத்தளங்களில் இருந்து ஒரு பெண் என்ற காரணத்தினால் நடத்தை தொடர்பான அவதூருகளும் அரசியல் ரீதியான அவதூறுகளும் எந்த ஆதாரமும் இல்லாமல் பரப்பப்படுகின்றன.வடகிழக்கினை எடுத்துக்கொண்டால் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களும் அதிகரித்துள்ளன. அவர்கள் தொடர்பாக பேசவேண்டிய தேவை தமிழ் சமூகத்தில் உள்ள எங்களுக்கு அதிகமாகவுள்ளது என மட்டு. ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *