Search
Tuesday 18 September 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பெருந்தோட்ட பிரதேசங்களுக்காக புதிய கிராமிய அபிவிருத்தி அதிகார சபை : அமைச்சரவை அங்கீகாரம்

பெருந்தோட்ட பிரதேசங்களுக்காக புதிய கிராமிய அபிவிருத்தி அதிகார சபை : அமைச்சரவை அங்கீகாரம்

பெருந்தோட்ட பிரதேசங்களுக்காக புதிய கிராமிய அபிவிருத்தி அதிகார சபை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளரும் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் பெருந்தோட்ட வலயத்தில் சமூக பொருளாதார கலாச்சாரம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் இந்த வலயத்தில் வாழும் சங்கத்தினர் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு செய்ய கூடிய வகையில் இவர்களை சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் பெருந்தோட்ட வலயத்திற்கு என புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபை ஒன்று அமைப்பதற்ககு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அந்நடவடிக்கைகளுக்காக சட்ட வரைஞர் திணைக்களத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி, அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திசாநாயக்க மற்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் பிரஜைகள் அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோரால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அச்சட்ட மூலம் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *