Search
Thursday 17 January 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பெறுபேறுகளில் குழப்பம்! திரிவுபடுத்தல்கள் உண்டு : என்கிறார் மகிந்த

பெறுபேறுகளில் குழப்பம்! திரிவுபடுத்தல்கள் உண்டு : என்கிறார் மகிந்த

வெளியாகியுள்ள தேர்தல் பெறுபேறுகளில் திரிவுபடுத்தல்களை அவதானிக்க முடிவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் முறைமையில் குளறுபடியொன்று உள்ளது. தேர்தல் பெறுபேறுகளை வெளியிடும் நடவடிக்கைகள் இன்னும் முறையாக நிறைவு செய்யப்படவில்லை. இதனால் இந்த தேர்தல் பெறுபேகளில் சிறிய திரிவுபடுத்தல்களை அவதானிக்க முடிகின்றதுது. குறிப்பாக வென்ற தரப்பினரை விடவும் தோல்வியடைந்த தரப்பை சேர்ந்தவர்கள் சில இடங்களில் அதிகமாக இருக்கின்றனர். ஒரு வட்டாரத்தையேனும் வெற்றிப் பெற முடியாதவர்களுக்கு அதிக ஆசனங்கள் இருக்கின்றன. என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *