Search
Saturday 23 June 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பேச்சுவார்த்தைகள் இடம்பெறும்போது இராணுவநடவடிக்கைகள் இல்லை – டிரம்ப் உறுதிமொழி வழங்கினார்

பேச்சுவார்த்தைகள் இடம்பெறும்போது இராணுவநடவடிக்கைகள் இல்லை – டிரம்ப் உறுதிமொழி வழங்கினார்

இராஜதந்திர முயற்சிகள் இடம்பெறும்போது வடகொரியாவிற்கு எதிராக இராணுவநடவடிக்கைகள் குறித்து சிந்திக்கப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தென்கொரிய ஜனாதிபதிக்கு உறுதிமொழி வழங்கியுள்ளார்.
தென்கொரிய ஜனாதிபதியுடனான தொலைபேசி உரையாடலின் போதே டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
வடகொரியாவுடன் பொருத்தமான தருணத்தில் உரிய சூழ்நிலைகளின் கீழ் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு தயார் என டிரம்ப் இந்த தொலைபேசி உரையாடலின் போது தெரிவித்தார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதேவேளை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவித்துள்ள டிரம்ப் தனது நிர்வாகம் வடகொரியாவிற்கு எதிராக விமானதாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது என்ற செய்திகளை நிராகரித்துள்ளார்
வலிமையூடாக சமாதானத்தை ஏற்படுத்தப்போகி;ன்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *