Search
Tuesday 2 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியங்கொட ஆகியோருக்கு கொலை அச்சுறுத்தல்

பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியங்கொட ஆகியோருக்கு கொலை அச்சுறுத்தல்

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் இரட்டைப் பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்திய பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியங்கொட ஆகியோருக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தநிலையிலேயே தமக்கு தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக குறித்த இருவரும் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிடுகையில் பிரஜைகளின் உரிமைக்காகவே நாம் செயற்பட்டோம். அந்தப் பிரஜைக்கு ஏதேனும் பிரச்சினை காணப்படுமாயின், அதனை நீதிமன்றத்திலோ அல்லது வேறு எங்குமோ கேட்க முடியும்.நாம் நீதிமன்றத்தை நாடியமை குறித்தே இங்கு பிரச்சினையுள்ளது.இயற்கை உயிரிழப்பு கிடைக்காமை குறித்து கவலையடைவதாகவும் கூறப்படுகின்றது. நாம் முன்னெடுக்காத மற்றும் எம்மால் பதிலளிக்க முடியாத விடயங்கள் குறித்து அவர்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறுகின்றனர்.

தாக்குதல் மற்றும் வெள்ளை வான் ஆகியவற்றை நினைவுபடுத்தல், வியங்கொட என்ற பெயருக்குப் பதிலாக எக்னெலிகொடவின் பெயரை நினைவுபடுத்தல் ஆகிய விடயங்கள் எனக்கும் காமினிக்கும் எதிராக இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *