Search
Wednesday 29 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பொகவந்தலாவ பகுதியில் வெள்ளம் காரணமாக 49 குடும்பங்களை சேர்ந்த 238 பேர்இடம்பெயர்வு

பொகவந்தலாவ பகுதியில் வெள்ளம் காரணமாக 49 குடும்பங்களை சேர்ந்த 238 பேர்இடம்பெயர்வு

இதேவேளை, பொகவந்தலாவ தெரேசியா தோட்டத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 15 கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் வீடும் பகுதியளவு சேதமாகியுள்ளது. 09.10.2019 அன்று பெய்த கடும் மழை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

 

இதில் குறித்த வீட்டில் உரிமையாளர்கள் சுய தொழிலுக்காக 15 கோழிகளை வளர்த்துள்ளனர். மண்மேடு சரிந்து விழுந்த வீட்டின் பின்பகுதியில் இந்த கோழிகள் பட்டிகள் ஊடாக வளர்க்கப்பட்டுள்ளது.அப்பட்டியின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் 15 கோழிகள் மண்ணில் புதையுண்டு உயிரிழந்துள்ளது.

 

அதேவேளை அந்த வீட்டின் பகுதியளவு சேதமடைந்திருப்பதால் அவ்வீட்டில் வசிக்கும் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, அப்பகுதயில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காரணமாக அப்பகுதியில் உள்ள 11 குடும்பங்களை சேர்ந்த 54 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.DSC02271 DSC02273


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *