Search
Friday 7 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களை பெற்று சரித்திரம் படைக்கும் – இரா. சம்பந்தன்

பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களை பெற்று சரித்திரம் படைக்கும் – இரா. சம்பந்தன்

நாடாளுமன்றத்திலும் சர்வதேசத்திலும் தமிழ் மக்களின் உரிமைக்கான எமது குரல் தொடர்ந்தும் ஒலித்துக்கொண்டிருக்கும் எனவே இம்முறை எமது குரல்களுக்கு மக்கள் பேலும் வலுவடையச் செய்ய வேண்டும்.கடந்த காலங்களை விட அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.அத்துடன் தமிழரின் தாயாக பூமியின் வரலாற்றினை மாற்றியமைக்கும் மறைமுக திட்டங்களை தென்னிலங்கை வகுத்து வருவதாக குற்றம் சாட்டிய இரா.சம்பந்தன், இதனை தடுத்து நிறுத்த அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களை பெற்று சரித்திரம் படைக்கும் எனவும் இந்த நம்பிக்கை தனக்கு உள்ளது எனவும் வடக்கு கிழக்கு மக்களின் ஏகோபித்த குரலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது என திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *