தலைப்பு செய்திகள்

பொதுத் தேர்தலுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைப்பு

பொதுத் தேர்தலுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைப்பு

பாராளுமன்ற தேர்தலை ஜுன் 20ஆம் திகதி நடத்தும் வர்த்தமானி மற்றும் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் ஐவரடங்கி நீதியசர்கள் குழாம் முன்னிலையில் 5ஆவது நாளாகவும் இன்று அந்த மனுக்கள் மீதான விசாரணைகள் நடத்தப்பட்ட போது பிரதிவாதிகளில் ஒருவரான ஜனாதிபதி செயலாளர் பீ.பீ.ஜயசுந்தர சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆஜராகியிருந்தார்.
இதன்போது நாட்டில் காணப்படும் தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜாசிங்கவினால் ஜனாதிபதி செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால்தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதில் தாமதிப்பது ஏன் என்பது பிரச்சினைக்குறிய விடயமாக உள்ளதாகவும் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *