தலைப்பு செய்திகள்

பொதுத் தேர்தல் எதிரான அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்கள் மீதான விசாரணை நாளை 10 மணிவரை ஒத்திவைப்பு

பொதுத் தேர்தல் எதிரான அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்கள் மீதான விசாரணை நாளை 10 மணிவரை ஒத்திவைப்பு

2020 பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும், ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மீதான பரிசீலனைகள் நாளை செவ்வாய்க்கிழமை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.உயர் நீதிமன்றில் ஐவர் கொண்ட விஜித் மலல்கொட, புவனேக அளுவிஹார, சிசிர டி ஆப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *