Search
Sunday 20 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பொதுத் தேர்தல் – வாக்களிப்புகள் ஆரம்பம்

பொதுத் தேர்தல் – வாக்களிப்புகள் ஆரம்பம்

இலங்கை பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்புகள் ஆரம்பமாகியுள்ளது.
இன்று காலை 7 மணி முதல் நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள 12,984 வாக்களிப்பு நிலையங்களில் கடும் சுகாதார பாதுகாப்புடன் வாக்களிப்புகள் ஆரம்பமாகியுள்ளன.
இம்முறை தேர்தலில் நாடு பூராகவும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 7452 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் அவர்களில் 196 பேரை தெரிவு செய்வதற்காக ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
வாக்களிப்பு நிலையத்தில் தேவையான சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் கொரோனா அச்சம் இன்றி மக்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லும் போது முகக்கவசத்தை அணிந்து செல்வதுடன் அங்கு சமூக இடைவெளியை பேணுவது அவசியமாகும். என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *