Search
Wednesday 22 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பொன்சேகாவின் கருத்தால் ஐ.தே.கவுக்குள் சலசலப்பு

பொன்சேகாவின் கருத்தால் ஐ.தே.கவுக்குள் சலசலப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை நியமித்தால் அதற்கு தான் தயாராக இருப்பதாக முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பாக அந்தக் கட்சிக்குள் சலசலப்பு நிலைமையொன்று உருவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டின் பாதுகாப்பே முக்கியமானது எனவும் இதன்படியே மகிந்த தரப்பினரால் கோதாபய ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியும் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டுமெனவும் இதற்கு நான் தயாராக இருப்பதாகவும் சரத் பொன்சேகா அறிவித்திருந்தார்.
ஆனால் அவரை மீண்டும் வேட்பாளராக நியமிக்க இடமளிக்க முடியாது எனவும் மக்கள் கோரும் வேட்பாளரையே நியமிக்க வேண்டுமெனவும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *