Search
Thursday 23 May 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பொருளாதார தடைகளுக்கு அஞ்சியே ராஜபக்ஸ தேர்தலை நடத்தினார்: சபை முதலவர்

பொருளாதார தடைகளுக்கு அஞ்சியே ராஜபக்ஸ தேர்தலை நடத்தினார்: சபை முதலவர்

பொருளாதார தடைகளுக்கு அஞ்சியே ஜனாதிபதி தேர்தலை இரண்டு வருடங்களுக்கு முன்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடத்தினார் என்றும் அவரது ஆட்சி தொடர்ந்திருந்தால் சில நாடுகளுடன் இலங்கை முரண்படவேண்டி இருந்திருக்கும் என்றும் சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி நாட்டில் தொடர்ந்திருக்குமாக இருந்திருந்தால் நாடு பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருக்கும்.

நாட்டை மஹிந்த ராஜபக்ஷ சீரழித்தார். மஹிந்தவின் ஆட்சி தொடர்ந்திருந்தால் நாம் சில சர்வதேச நாடுகளுடன் முரண்பட வேண்டிய ஏற்பட்டிருக்கும். எனினும் நாம் நாட்டை சர்வதேசத்திடமிருந்து காப்பாற்றினோம்“ என குறிப்பிட்டார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *