செய்திகள்

பொலிஸ் அதிகாரியை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸ்

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய தற்போது தலைமறைவாக இருக்கும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை கைது செய்வதற்காக பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பொலிஸ் தலைமையகம் இது தொடர்பான அறிவித்தல் ஒன்றை விடுத்து அவரை பிடிப்பதற்கு உதவுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
போதைப் பொருள் வியாபார நடவடிக்கைகளுடன் தொடர்புடைய விசாரணைகளுக்காக இவர் தேடப்பட்டு வருவதாகவும் வெகரவத்த கங்கானம்லாகே சமன் வசந்த குமார என்ற 49 வயதுடைய வெலிவேரிய பிரதேச முகவரியை கொண்டவரையே இவ்வாறாக தேடுவதாகவும் இவர் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் 071 859 1767 அல்லது 0112 422 176 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். -(3)