Search
Wednesday 2 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபராக உள்ள சி.டி. விக்ரமரத்ன தெரிவு

பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபராக உள்ள சி.டி. விக்ரமரத்ன தெரிவு

பதில் பொலிஸ்மா அதிபராக உள்ள சி.டி. விக்ரமரத்ன பொலிஸ் அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ஜனாதிபதியால் விக்ரமரத்னவின் பெயர் நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.அந்தவகையில் எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்ற பேரவை கூடும்போது இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு பின்னர் ஜனாதிபதியினால் நியமனம் முறைப்படி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து, அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டதை அடுத்து 33 வருடம் அனுபவம் கொண்ட சி.டி. விக்ரமரத்ன பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து விக்ரமரத்ன பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட நிலையில் 19 மாதங்களாக அப்பதவியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *