Search
Saturday 7 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

போட்டியில் தோற்று பாக்கிஸ்தானின் இதயத்தை வென்ற இலங்கை வீரர்கள்

போட்டியில் தோற்று பாக்கிஸ்தானின் இதயத்தை வென்ற இலங்கை வீரர்கள்

பாக்கிஸ்தானில் இடம்பெற்ற மூன்றாவது இருபதிற்கு இருபது போட்டியிலும் இலங்கை அணி தோல்வியடைந்த போதிலும் பாக்கிஸ்தானிற்கு துணிச்சலான பயணத்தை மேற்கொண்டமைக்காக இலங்கை அணிக்கு பாக்கிஸ்தான் வீரர்கள் தங்கள் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
பாக்கிஸ்தான் வீரர்கள் முன்னாள் வீரர்கள் மற்றும் இரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
பாக்கிஸ்தானிற்கு விஜயம் மேற்கொண்டு எங்கள் இதயத்தை வென்றதற்காக இலங்கைக்கு நன்றிகள் என முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சொயிப் அக்தர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தானிற்கு விஜயம் மேற்கொண்டதற்காக இலங்கைக்கு நன்றி என வேகப்பந்துவீச்சாளர் யுனைட் கான் தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தானிற்கு மீண்டும வந்தமைக்காக இலங்கை அணிக்கு நன்றி என சொயிப்மலிக்கும் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *