Search
Tuesday 25 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

போதையில் வாகனம் செலுத்தினால் விசாரணை முடிவும் வரை மறியல்

போதையில் வாகனம் செலுத்தினால் விசாரணை முடிவும் வரை மறியல்

புத்தாண்டுக் காலப்பகுதியில் மதுபானம் அருந்தி வாகனத்தை செலுத்தும் சாரதிகள் மற்றும் வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளைக் கைது செய்வதற்கான விசேட பொலிஸ் நடவடிக்கை முன்னெடுககப்பட்டுள்ளது.
போதையில் வாகனங்களை செலுத்துவதற்கான குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் சாரதிகள் விசாரணை நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என்று வாகனங்கள் தொடர்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
குறிப்பிட்ட வாகனங்களையும் பொலிஸார் பொறுப்பேற்பர். போதையில் வாகனத்தை செலுத்துவோர் தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டவிதிகள் கடுமையாக்கப்படும் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார். போதையில் வாகனத்தை செலுத்தும் மற்றும் வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளை கைது செய்யும் விசேட நடவடிக்கை 24 மணித்தியாலங்களும் இடம்பெறும். இதற்காக சுமார் எட்டாயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *