Search
Wednesday 16 January 2019
  • :
  • :

போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் தேவை இல்லை என்பதை இலங்கை நீதித்துறை உறுதிப்படுத்தியுள்ளது: ஜே. வி. பி

போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் தேவை இல்லை என்பதை இலங்கை நீதித்துறை உறுதிப்படுத்தியுள்ளது: ஜே. வி. பி

இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்ற மற்றும் மந்த உரிமைகள் மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளை நடத்துவதற்கு இலங்கையின் நீதி துறை முற்றிலும் தகைமை உடையது என்பது அண்மையில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னனி தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று உரை ஆற்றியபோது இவ்வாறு தெரிவித்த ஜே வி பி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க அண்மைய அரசியல் நெருக்கடியில் இலங்கை நீதித்துறை செயற்பட்ட விதம் போர்க்குற்ற விசாரணைகளை வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணைசெய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை காட்டுகிறது என்று கூறினார்.

இந்த விடயத்தை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டுசென்று இலங்கையில் வெளிநாட்டு தலையீடு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *