தலைப்பு செய்திகள்

பௌத்த – சிங்கள இனவெறியின் காட்டுமிராண்டித்தனம் மீண்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது-என்.ஸ்ரீகாந்தா

பௌத்த – சிங்கள இனவெறியின் காட்டுமிராண்டித்தனம் மீண்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது-என்.ஸ்ரீகாந்தா

தென்கையிலை ஆதீனம் அகத்தியர் அடிகள் மீதும் கன்னியா வெந்நீரூற்றுக் காணியின் உரிமையாளரான பெண் ஒருவர் மீதும் மேற்கொள்ளப்பட்ட கீழ்த்தரமான தாக்குதல் மூலம் பௌத்த – சிங்கள இனவெறியின் காட்டுமிராண்டித்தனம் மீண்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.ஆயினும் இந்த வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தி சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்ட அங்கிருந்த பொலிஸ் படை தவறியிருக்கின்றது.மாறாக அங்கு திரண்டு வந்திருந்த தமிழ் மக்கள் மீது அடக்குமுறை கலந்த அழுத்தம் பொலிசாரால் பிரயோகிக்கப்பட்டுள்ளது. பாரபட்சமின்றி செயற்பட வேண்டிய பொலிஸ் அதிகாரிகள் சிங்கள – பௌத்த உணர்வாளர்களாகச் செயற்பட்டிருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது.இவற்றுக்கெல்லாம் மூல காரணம் நல்லாட்சி அரசாங்கத்தின் அணுகுமுறை காரணமென ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகமும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுள்ளதாவது,கூட்டமைப்பின் தலைவரால் பிரதிநிதித்துவப் படுத்தப்படும் திருகோணமலை மாவட்டத்தில் தமது அடிப்படை உரிமைகளுக்கு தமிழ் மக்கள் போராட வேண்டியுள்ள நிலைமையில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்து வைக்க கூட்டமைப்பு தவறினால் அதன் நாட்கள் எண்ணப்படும் நிலைமை தவிர்க்கப்பட முடியாதது என்பதை சம்பந்தப்பட்ட சகலரும் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தனை காலமும் எமது இனத்தின் விடுதலை நோக்கிய பயணத்தில் இந்திய துணைக் கண்டத்தில் வாழும் எட்டு கோடி தமிழர்களின் ஆதரவையே நாம் தொடர்ந்து நாடி வந்திருக்கின்றோம்.ஆனால், தமிழ் இனத்தின் வரலாற்றையும் இருப்பையும் வாழ்வையும் சிதைக்கச் செயற்படும் பௌத்த – சிங்கள்பேரினவாதம் இந்துக் கோவில்களையும் வரலாற்றுச் சின்னங்களையும் தொடர்ந்து குறிவைக்கப் போகிறது என்றால் இந்தத் திட்டத்தைத் தகர்த்தெறிய இந்திய நாட்டின் நூறு கோடிக்கு மேற்பட்ட இந்துக்களின் நேரடித் தலையீட்டை நாம் பகிரங்கமாக கோர வேண்டியிருக்கும் என சகல சிங்களக் கட்சிகளையும் சேர்ந்த பௌத்த – சிங்கள பேரினவாதிகள் அனைவருக்கும் நாம் கூறிக்கொள்கின்றோம்.

கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் கோவில் இடித்து அழிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு திரண்ட தமிழ் மக்களுக்கு எதிராக பௌத்த – சிங்கள இனவெறி தனது கோர முகத்தைக் காட்டியுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *