Search
Wednesday 20 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மகப்பேற்று வைத்தியர் ஷாபி ஷியாப்தீனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை- குற்றப் புலனாய்வு பிரிவினர்

மகப்பேற்று வைத்தியர் ஷாபி ஷியாப்தீனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை- குற்றப் புலனாய்வு பிரிவினர்

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபி ஷியாப்தீனுக்கு எதிராக, முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.நேற்று பிற்பகல் 2 மணியளவில் குருநாகல் நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் வைத்தியர் ஷாபியைக் கைதுசெய்த விடயத்தில் முறைகேடு இடம்பெற்றிருப்பதாக, குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடையவர் என்றோ, சட்டவிரோதமான முறையில் சொத்து சேகரித்தவர், தாய்மார்களுக்கு கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டார் போன்ற எவ்வித குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை என்றும் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *