மகாநாயக்க தேரர்களை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் தான் கருத்து வெளியிடவில்லை என்பதால் பொதுமன்னிப்பு கேட்பதற்கு அவசியம் இல்லை என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.பௌத்த பிக்குகள் தொடர்பாக, தான் வெளியிட்ட கருத்து குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்து இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, அலரி மாளிகைக்கு சென்று பிரதமரை சந்தித்து விளக்கமளித்துள்ளார்.மேலும் மகாநாயக்க தேரர்களை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னதாக ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.(15)