Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மகாநாயக்க தேரர்களை சந்தித்து தெளிவுப்படுத்துவோம் : ஹக்கீம்

மகாநாயக்க தேரர்களை சந்தித்து தெளிவுப்படுத்துவோம் : ஹக்கீம்

மகாநாயக்க தேரர் உள்ளிட்ட சங்க சபையினரை சந்தித்து நாம் எமது நிலைப்பாட்டை அறிவிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களும் விடுத்துள்ள விசேட அறிவிப்பை நாம் மதிக்கின்றோம். அறிவிப்பொன்றை விடுத்ததற்காக அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கடந்த திங்கட்கிழமை இராஜினாமாக் கடிதத்தை, அறிக்கை ஒன்றின் ஊடாக முஸ்லிம் அமைச்சர்களான செய்தியாளர் மகாநாட்டுக்கு பின்னர் நாம் கூட்டாகவே கையளித்தோம். எனினும், அரசியலமைப்பின் பிரகாரம் தனித்தனியாகவே இராஜினாமாக் கடிதங்கள் கையளிக்கப்பட வேண்டும் என பிரதமர் கூறினார். இதற்கிடையில் நோன்பு பெருநாள் காரணமாக எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் சொந்த இடங்களுக்கு பயணத்தை மேற்கொண்டனர். இதனால் இராஜினாமாக் கடிதத்தை கையளிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது. கடந்த திங்கட்கிழமை முதல் நாம் அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகிவிட்டோம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் . இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பாதுகாப்பு சூழலை கருத்திற் கொண்டு எமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவே நாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டோம். என்றார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *