Search
Sunday 19 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மகிந்தவின் கையில் சிக்கப் போகும் சுதந்திரக் கட்சி : மீட்டெடுக்கும் நடவடிக்கையை ஆரம்பிக்க தயாராகும் சந்திரிகா

மகிந்தவின் கையில் சிக்கப் போகும் சுதந்திரக் கட்சி : மீட்டெடுக்கும் நடவடிக்கையை ஆரம்பிக்க தயாராகும் சந்திரிகா

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான குழுவொன்று தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான நடவடிக்கைகள் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தற்போது குமார வெல்கம தலைமையில் கட்சியின் அதிருப்தி குழுக்களை சந்திக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
சுதந்திரக் கட்சி பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்‌ஷவை ஆதரிக்க தீர்மானித்துள்ளமையினால் அந்த கட்சியின் குழுவொன்று கட்சியை மகிந்த ராஜபக்‌ஷவின் கைக்கு சென்றுவிடாதவாறு கட்சியை மீட்டெடுக்கும் அமைப்பு என்ற பெயரில் குமார வெல்கம தலைமையில் குழுவொன்றை அமைத்து அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *