Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மகிந்த தலைமையில் புதிய கூட்டணி: அடுத்த வாரம் கொழும்பில் பொதுக் கூட்டம்

மகிந்த தலைமையில் புதிய கூட்டணி: அடுத்த வாரம் கொழும்பில் பொதுக் கூட்டம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர், முதல் முறையாக பொதுமக்கள் முன்பாக அரசியல் மேடை ஒன்றில் தோன்றவுள்ளார். புதிதாக அமைக்கப்படும் கூட்டணியின் தலைவராகவே அவர் மேடையேறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஓரம்கட்டுப்பட்டு வரும் நிலையில், மகிந்த ராஜபக்ஷவை முன்னிறுத்தி, புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தினேஸ் குணவர்த்தன மற்றும் விமல்  வீரவன்ச ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னைய கூட்டணிக் கட்சிகள் இணைந்து, மகிந்த ராஜபக்ஷவை முன்னிறுத்திப் புதிய கூட்டணியை உருவாக்கவுள்ளன. இந்தப் புதிய கூட்டணியின் முதலாவது கூட்டம், வரும் 18 ஆம் திகதி நுகேகொடவில் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ஷ பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *